வெள்ளி, 20 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 7 மார்ச் 2022 (09:56 IST)

குஜராத்தி படத்தின் ரீமேக் உரிமையைக் கைப்பற்றியுள்ள பிரகாஷ் ராஜ்! மீண்டும் இயக்குனர் அவதாரமா?

நடிகர் பிரகாஷ் ராஜ் நடிப்பைத் தவிர இயக்கம், படத்தயாரிப்பு என பன்முகத் திறமைக் கொண்டவராக இருந்து வருபவர்.

நடிகர் பிரகாஷ் ராஜ் தென்னிந்திய மொழிகளிலும் முன்னணி நடிகராக பிஸியாக வலம் வந்து கொண்டிருப்பவர். அதுமட்டுமில்லாமல் பல பாலிவுட் படங்களிலும் அவர் நடித்து இந்தியா முழுவதும் நன்கு அறியப்பட்ட நடிகர். நடிப்பு மட்டும் இல்லாமல் சில திரைப்படங்களை இயக்கியும் தயாரித்தும் உள்ளார். அவரின் டூயட் மூவிஸ் நிறுவனம் தயாரித்த படங்கள் தரமான படங்கள் என்ற பாராட்டைப் பெற்றவை.

இந்நிலையில் சில ஆண்டுகளாக அவரின் டூயட் மூவிஸ் நிறுவனம் படங்களை தயாரிக்காமல் இருந்த நிலையில் இப்போது குஜராத்தியில் வெளியாகி கவனம் பெற்ற டியர் பாதர் என்ற படத்தின் தென்னிந்திய மொழிகளுக்கான ரீமேக் உரிமையை அவர் கைப்பற்றியுள்ளார். இந்த படத்தில் நடித்து அவரே இயக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.