உடல் நலம் பாதிப்பு… உதவி கேட்கும் விஜய் பட நடிகர் !!!
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான பெஞ்சமின் உடல் நலம் பாதிப்பட்டுள்ளதால் உதவிகேட்டு ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமவில் வெற்றிக்கொடி கட்டு, தமிழ், பகவதி, திருப்பாச்சி, போன்ற படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர் பெஞ்சமின்.
இவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனவே தனக்கு உதவி செய்யுமாறு கூறிச் சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், தான் நெஞ்சுவலி காரணமாக சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தேன். ஆபரேசன் செய்வதற்கு பணமில்லை; அதனால் மேற்சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள ஒரு மருத்துவமனைக்குச் செல்குகிறேன். அதற்கு எவ்வளவு செலவாகும் எனத் தெரியவில்லை அதனால் நண்பர்கள் மருத்துவசிகிச்சைக்கு உதவு செய்யுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.