திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 16 டிசம்பர் 2020 (17:33 IST)

’’தேசிய விருது’’ நடிகருக்கு தொடர்ந்து வில்லன் பட வாய்ப்புகள்! ரசிகர்கள் வருத்தம் !

தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவில்  அறிமுகமான வேகத்திலேயே தேசிய விருது பெற்ற நடிகர் பாபி சிம்ஹா.

இவர் தேசிய விருது பெற்றாலும் அடுத்தடுத்து நடித்து வெளியான படங்கள் போதிய வரவேற்பைப் பெறவில்லை. கடந்தாண்டு வெளியான ரஜினியின் பேட்டை திரைப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து வரவேற்பைப் பெற்றார்.

இந்நிலையில், தற்போது தெலுங்கு சினிமாவில் தனது கவனத்தைக் குவித்துள்ள பாபி சிம்ஹா,  இந்த ஆண்டில் ஜனவரி மாதத்தில் ரிலீஸான டிஸ்கோ ராஜா படத்தில் ரவி தேஜாவுக்கு வில்லனாக நடித்திருந்தார். இவரது நடிப்பு அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஜி.நாகேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் சந்தீப் கிஷன் ஹீரோவாகன் நடிக்கவுள்ள  ஒரு புதுப்படத்திற்கு  பாலி சிம்ஹா வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.இதனால் இப்படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது. பாபி சின்ஹா வில்லன் வேடத்தில் நடிப்பது அவரது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற் படுத்தியுள்ளது.

பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான சீறும் புலி என்ற பாலி சிம்ஹா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.