வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 16 டிசம்பர் 2020 (09:55 IST)

சினிமாவில் அறிமுகமாகும் விஜயகாந்த் மூத்த மகன்: யார் இயக்குனர்?

சினிமாவில் அறிமுகமாகும் விஜயகாந்த் மூத்த மகன்: யார் இயக்குனர்?
கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் ஏற்கனவே ’சகாப்தம்’ மற்றும் ‘மதுரைவீரன்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார் என்பதும் மேலும் அவர் ’தமிழன் என்று சொல்’ மற்றும் ‘மித்ரன்’ ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் தற்போது விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் சினிமாவில் நடிக்க உள்ளார். இதுவரை பிசினஸ் மற்றும் கட்சி பணிகளை கவனித்து வந்த விஜய் பிரபாகரனின் பார்வை தற்போது சினிமா பக்கம் திரும்பியுள்ளது. இதற்காக அவர் தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக உள்ளார். தற்போது அவர் ஒரு ஹீரோவுக்கு உரிய அந்தஸ்தை பெற்று உள்ளதாகவும் கூறப்படுகிறது 
 
விஜயபிரபாகரன் நடிக்க உள்ள படத்தை முன்னணி இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தில் இருப்பதை அடுத்து வெகு விரைவில் இந்த செய்தி உறுதியானதும் முறைப்படி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. விஜயபிரபாகரன் முதல்படமே சூப்பர் ஹிட் படமாக இருக்க வேண்டும் என்பதனால் அந்த பிரபல இயக்குனர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது