திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 16 டிசம்பர் 2020 (13:46 IST)

நாளை ‘மாஸ்டர்’ படத்தின் அடுத்த டீசர்: குஷியில் விஜய் ரசிகர்கள்!

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி சமூக வலைதளங்களில் மிக பெரிய வரவேற்ப்பை பெற்றது என்பது தெரிந்ததே. அதிக கமெண்ட்டுகள் பதிவான டீசர் உள்பட பல்வேறு சாதனைகளை இந்த டீசர் படைத்துள்ளது விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக உள்ளது 
 
இந்த நிலையில் தற்போது தமிழைத் தொடர்ந்து தெலுங்கு மொழியில் ‘மாஸ்டர்’ படத்தின் டீசர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர் ‘மாஸ்டர்’ திரைப்படம் தமிழைப் போலவே தெலுங்கு மொழியிலும் வரும் பொங்கல் விருந்தாக வெளியாக உள்ளது. அதற்கான டப்பிங் ஏற்பாடு டப்பிங் பணிகள் முழுவதும் முடிந்துவிட்ட நிலையில் தற்போது தெலுங்கு மொழி டீசரை படக்குழுவினர் வெளியிடவிருக்கிறார்கள் 
 
அதுமட்டுமன்றி கன்னடம் மலையாளம் ஹிந்தி உட்பட அனைத்து மொழிகளிலும் ‘மாஸ்டர்’  திரைப்படம் ஒரே நாளில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதை அடுத்து இந்த படம் ஒரே நாளில் அனைத்து மொழிகளிலும் வெளியாகி வசூலில் மிகப்பெரிய சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது