திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 16 டிசம்பர் 2020 (10:40 IST)

அமீர்கான் படத்தில் இருந்து நீக்கப்படடாரா விஜய் சேதுபதி?

அமீர்கான் நடிக்கும் லால் சிங் லட்டா படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

1994 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான பாரஸ்ட் கம்ப் படம் ஆஸ்கர்களை அள்ளியது. அதுமட்டுமில்லாமல் இன்று வரை உலக சினிமா ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இடம்பெற்றுள்ள படமாக உள்ளது.  இந்த படத்திஅ 25 ஆண்டுகள் கழித்து பாலிவுட் நடிகர் அமீர்கான் லால் சிங் லட்டா எனும் பெயரில் ரீமேக் செய்து வருகிறார். அந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதியும் தேர்வானார். ஆனால் அவர் இதுவரை படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுல்லை. அமீர் கான் நடிக்கும் துபாயில் நடந்து முடிந்தன.

இந்நிலையில் இப்போது இந்த படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிவிட்டதாக சொல்லப்படுகிறது. தமிழிலேயே நடிக்க முடியாத அளவுக்கு படங்களை வைத்திருக்கும் அவர் அமீர்கான் படத்துக்கு தேதிகள் ஒதுக்க முடியாததால் அதிலிருந்து வெளியேறி விட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் மற்றொரு தகவலாக படத்தில் ராணுவ அதிகாரியாக நடிப்பதற்காக அமீர்கான், விஜய் சேதுபதியின் உடல் எடையை குறைக்க சொன்னதாகவும், அதை விஜய் சேதுபதி செய்யாததால் அவரைப் படத்தில் இருந்து நீக்கியதாகவும் சொல்லப்படுகிறது.