பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆஷா போன்ஸ்லே!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆஷா போன்ஸ்லே
பிரபல பின்னணிப் பாடகி ஆஷா போன்ஸ்லே இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு உலகெங்கிலும் உள்ள இசை ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
பாலிவுட்டின் முன்னணி பாடகியாக கடந்த பல ஆண்டுகளாக ஆஷா போன்ஸ்லே இருந்து வருகிறார் என்பதும் அவரது மெலடி பாடல்கள் உருக வைக்கும் அளவுக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு ரசிகர்களின் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
பாலிவுட் படங்களில் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு உள்பட பல மொழிகளில் இவர் பாடியுள்ளார் என்பதும் இரண்டு முறை சிறந்த பாடகி என்ற தேசிய விருதைப் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
ஏழு முறை அவர் பிலிம்பேர் அவார்ட் பெற்றிருக்கிறார் என்பதும் இந்தியாவின் உயரிய விருதான பத்மபூஷன் மற்றும் தாதா சாகிப் பால்கே விருதுகளையும் அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் பாடகி ஆஷா போன்ஸ்லே அவர்களுக்கு வெப்துனியா சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்