1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 2 செப்டம்பர் 2021 (07:05 IST)

HBD நடிகர் சுதீப்!

பிரபல கன்னட மற்றும் தமிழ் நடிகர் சுதீப் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
 
கன்னடத்தில் பிரபலமான இருக்கும் நடிகர் சுதீப் தமிழில் ’நான் ஈ’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய இந்த திரைப்படத்தில் அவர் வில்லனாக நடித்தார் என்பதும் சமந்தா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனை அடுத்து விஜய் நடித்த புலி என்ற திரைப்படத்தில் நடித்து மிகப் பெரிய புகழை பெற்றார் அதேபோல் பாகுபலி திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
தற்போது தமிழ் தெலுங்கு ஹிந்தி கன்னடம் ஆகிய மொழிகளில் பிரபலமாக இருக்கும் நடிகர் சுதீப் மூன்று படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் சுதீப் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது