செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : வியாழன், 31 மே 2018 (20:56 IST)

3 பாடல்களை உடனடியாக முடித்துக் கொடுத்த ஜீ.வி.பிரகாஷ்

வசந்தபாலன் இயக்கிவரும் படத்துக்காக 3 பாடல்களை உடனடியாக முடித்துக் கொடுத்திருக்கிறார் ஜீ.வி.பிரகாஷ்.
வசந்தபாலன் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘காவியத் தலைவன்’. சித்தார்த், வேதிகா, அனைக்கா சோடி, பிருத்விராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். 2014ஆம் ஆண்டு ரிலீஸான இந்தப் படம், அவ்வளவாகப் போகவில்லை. அதன்பின் எந்தப் படத்தையும் இயக்காத வசந்தபாலன், தற்போது ஜீ.வி.பிரகாஷை வைத்து ஒரு படத்தைத் தொடங்கியிருக்கிறார்.

பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் படமாக்கப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக 25 நாட்கள் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிடப்பட்டு, அதன்படியே ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. ஆர்யாவின் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியாளர்களில் ஒருவரான அபர்ணாதி, ஜீ.வி.பிரகாஷ் ஜோடியாக நடிக்கிறார். ராதிகா சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்துக்கு ஜீ.வி.பிரகாஷே இசையமைக்கிறார். படப்பிடிப்புக்கு மத்தியில், 3 பாடல்களையும் உடனடியாக முடித்துக்
கொடுத்திருக்கிறார் ஜீ.வி.