1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : வியாழன், 31 மே 2018 (20:55 IST)

அம்மாவின் பெயரைத் தன் பெயருக்குப் பின்னால் சேர்த்துக்கொண்ட நடிகை

அம்மாவின் பெயரைத் தன் பெயருக்குப் பின்னால் சேர்த்துக் கொண்டுள்ளார் அர்த்தனா பினு.
 
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் அர்த்தனா பினு. கல்லூரியில் படிக்கும்போதே ‘சீதம்மா அண்டாலு ராமய்யா சிட்ராலு’ என்ற தெலுங்குப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பின், ‘மதுகாவ்’ என்ற மலையாளப் படத்தில்
நடித்தார்.
 
சமுத்திரக்கனி இயக்கிய ‘தொண்டன்’ படத்தில், விக்ராந்த் ஜோடியாக தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு, கடந்த வாரம் ரிலீஸான ‘செம’ படத்தில் ஜீ.வி.பிரகாஷ் ஜோடியாக நடித்துள்ளார். மேலும், பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் கார்த்தியின் மாமா பெண்களில் ஒருவராகவும், ‘வெண்ணிலா கபடிக்குழு 2’ படத்தில் மறுபடியும் விக்ராந்த் ஜோடியாகவும் நடித்துள்ளார்.
 
பொதுவாக, நடிகைகள் தங்கள் அப்பா பெயரையோ அல்லது குடும்பப் பெயரையோ, ஒருசிலர் ஜாதிப் பெயரையோ சேர்த்துக் கொள்வார்கள். ஆனால், அர்த்தனா பினு இதில் வித்தியாசமாக இருக்கிறார். பினு என்பது அவரின் அம்மா பெயராம். அவர்மீது கொண்ட பாசத்தால் தன் பெயருக்குப் பின்னால் அம்மா பெயரைச் சேர்த்துள்ளார் அர்த்தனா பினு.