1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : வியாழன், 31 மே 2018 (20:55 IST)

ரஜினி படத்துக்கு மட்டுமல்ல, கமல் படத்துக்கும் இசையமைக்கும் அனிருத்

ரஜினி படத்துக்கு மட்டுமல்ல, கமல் படத்துக்கும் அனிருத் தான் இசையமைக்கிறார்.
 
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினி. இந்தப் படத்தின் ஷூட்டிங், டேராடூனில் வருகிற ஜூன் 4ஆம் தேதி தொடங்க இருக்கிறது. ரஜினியின் மகன்களாக பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி இருவரும் நடிக்கின்றனர். சிம்ரன், அஞ்சலி இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
 
ரஜினி படத்துக்கு இசையமைக்கும் அதேநேரத்தில், கமல் நடிக்க இருக்கும் ‘இந்தியன் 2’ படத்துக்கும் இசையமைக்கிறார் அனிருத். 22 வருடங்களுக்குப் பிறகு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணகுமார் மூவரும் இணைந்து இந்தப் படத்துக்கு வசனம் எழுதியுள்ளனர்.
 
தனுஷ் நடித்த ‘3’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, நயன்தாரா படங்களுக்கு இசையமைத்துள்ள அனிருத்துக்கு, இது டபுள் ட்ரீட்டாக அமைந்துள்ளது.