வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 31 மே 2018 (20:56 IST)

தமிழ்படம் 2.0 படத்தின் டீசர் ரிலீஸ் அறிவிப்பு!

சிவா நடிப்பில் வெளிவர இருக்கும் தமிழ்படம் 2.0 படத்தின் டீசர் வரும் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் ‘மிர்ச்சி’ சிவா நடித்த படம் ‘தமிழ்படம்’. இந்தப் படத்தில் திஷா பாண்டே ஹீரோயினாக நடித்தார். எம்.எஸ்.பாஸ்கர், ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி, மனோபாலா, டெல்லி கணேஷ், பரவை முனியம்மா ஆகியோர் நடித்திருந்தனர். எல்லா நடிகர்களையும் கிண்டல் செய்து காமெடியாக எடுக்கப்பட்ட இந்தப் படம், சூப்பர் ஹிட்டானது.
 
தற்போது இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் அதே கூட்டணியை வைத்து தமிழ்படம் 2.0 என்ற பெயரில் படமாகப்பட்டு, மே 25ம் தேதி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில தொழில்நுட்ப பிரச்சனைகளால் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது.
 
இந்த நிலையில், இப்படத்தின் டீசர் நாளை வெள்ளிக்கிழமை ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பாகம் ஒரு போலீஸ் அத்தியாயமாக இருக்கும் என்று போஸ்டர் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.