1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : வியாழன், 31 மே 2018 (20:55 IST)

விஜய் டிவி ஸ்டார்களின் படத்தை வாங்கியது ஜீ தமிழ்

விஜய் டிவி ஸ்டார்கள் நடித்த படத்தை, ஜீ தமிழ் டிவி வாங்கியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் போட்டியாளர்களாகக் கலந்து கொண்டவர்கள் ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைஸா வில்சன். விஜய் டிவி நிகழ்ச்சியிலோ அல்லது சீரியலிலோ ஒருமுறை பங்கேற்றால் போதும். பல வருடங்களுக்கு அவர்களை ‘விஜய் ஸ்டார்’ என கொண்டாடி, அவர்களையும், நிகழ்ச்சியைப் பார்க்கிற நம்மையும் வெச்சி செய்வார்கள்.
 
அப்படித்தான் ‘பிக் பாஸ்’ முடிந்தபிறகும் ஹரிஷ் கல்யாணையும், ரைஸாவையும் விஜய் டிவி ஸ்டார்ஸ் எனக் கொண்டாடி வருகின்றனர். இந்த இருவரும் சேர்ந்து ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்தில் நடித்துள்ளனர். இளன் இயக்கியுள்ள இந்தப் படத்தை, யுவன் சங்கர் ராஜா தயாரிப்பதோடு, இசையும் அமைத்துள்ளார்.
 
இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்தப் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஜீ தமிழ் டிவி வாங்கியுள்ளது. விஜய் டிவி ஸ்டார்களின் படத்தை இன்னொரு டிவி வாங்கியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.