1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 13 செப்டம்பர் 2020 (17:46 IST)

என்னை மகள் போல நடத்தினார்... கங்கனா ஆளுநரைச் சந்திப்பு !

நடிகை கங்கனா ரனாவத் மகாராஷ்ட்டிரா மாநில ஆளுநரைச் சந்தித்தார். இது குறித்த புகைப்படமும் வெளியாகியுள்ளது. 

 
நடிகை கங்கனா ரனாவத் சமீபத்தில் மும்பை காவல்துறை பற்றியும், மும்பை நகரை ஆக்கிரமிப்பு காஷ்மீருடனும் தொடர்புபடுத்தியும் பேசியது சர்ச்சையானது. இதைத்தொடர்ந்து பந்த்ராவில் உள்ள நடிகை கங்கனாவின் பங்களாவின் பல பகுதிகள் சட்டவிரோதமாக கட்டப்பட்டதாகக் கூறி மாநகராட்சி இடித்துத் தள்ளியது. 
 
இதனால் ஆளும் சிவசேனா கட்சிக்கும் கங்கனா ரனாவத்திற்கும் இடையேயான மோதல் போக்கு முற்றியது. இதனையடுத்து மத்திய அரசு அவருக்கு ஒய் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கியது. இந்நிலையில், அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷியாரியை கங்கனா ரனாவத் சந்தித்துப் பேசுகிறார் என தகவல் வெளியாகியது. 
அதன்படி கங்கனா அவரது சகோதரி ரங்கோலியுடன் ஆளுநர் பகத் சிங் கோஷியாரியை சந்தித்து பேசியுள்ளார். இது குறித்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இது குறித்து கங்கனா தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.