1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 13 செப்டம்பர் 2020 (09:54 IST)

முற்றும் மோதல் ... மாலை ஆளுநரை சந்திக்கும் கங்கனா?

நடிகை கங்கனா ரனாவத் இன்று மாலை 4.30 மணிக்கு , ஆளுநரை சந்தித்துப் பேசுகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. 
 
நடிகை கங்கனா ரனாவத் சமீபத்தில் மும்பை காவல்துறை பற்றியும், மும்பை நகரை ஆக்கிரமிப்பு காஷ்மீருடனும் தொடர்புபடுத்தியும் பேசியது சர்ச்சையானது. இதைத்தொடர்ந்து பந்த்ராவில் உள்ள நடிகை கங்கனாவின் பங்களாவின் பல பகுதிகள் சட்டவிரோதமாக கட்டப்பட்டதாகக் கூறி மாநகராட்சி இடித்துத் தள்ளியது.
 
இதனால் ஆளும் சிவசேனா கட்சிக்கும் கங்கனா ரனாவத்திற்கும் இடையேயான மோதல் போக்கு முற்றியது. இதனையடுத்து மத்திய அரசு அவருக்கு ஒய் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கியது. 
 
இந்நிலையில், அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷியாரியை கங்கனா ரனாவத் இன்று மாலை 4.30 மணிக்கு சந்தித்துப் பேசுகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.