செவ்வாய், 25 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 25 பிப்ரவரி 2025 (15:07 IST)

தமிழக மக்கள்தான் என்னை நடிகையாக ஏற்றுக்கொண்டார்கள்… ஜோதிகா நெகிழ்ச்சி!

தமிழில் பிரபல கதாநாயகியாக இருந்த ஜோதிகா, சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு, சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் விலகி இருந்தார். ஆனால் அதன் பின்னர் 36 வயதினிலே படத்தின் மூலம் திரும்பவும் நடிக்க வந்த அவர் பல படங்களில் நடித்தார். சில மாதங்களுக்கு முன்னர் மலையாளத்தில் மம்மூட்டி ஜோடியாக காதல் என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்த படம் அவரின் நடிப்புக்கு பாராட்டுகளைப் பெற்று தந்தது.

இதையடுத்து பாலிவுட்டில் ஷைத்தான் என்ற படத்தில் அஜய் தேவ்கன் மற்றும் மாதவன் ஆகியோரோடு இணைந்து நடித்தார். இந்த படம் கடந்த மாதம் வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்றது. இதையடுத்து அவர் தொழிலதிபர் ஸ்ரீகாந்த் போலாவின் பயோபிக் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் கலந்துகொண்ட ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் “நான் நடித்த முதல் இந்தி படம் வெற்றிப்படமாக அமையவில்லை. அதனால் எனக்கு இந்தியில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அப்போதுதான் எனக்கு தமிழில் முதல் படம் கிடைத்தது. அந்த படமும் சரியாகப் போகவில்லை. ஆனால் தமிழ் மக்கள் என்னை ஒரு நடிகையாக ஏற்றுக்கொண்டார்கள். அப்படிதான் நான் தமிழ் சினிமாவுக்குள் வந்தேன்” எனக் கூறியுள்ளார்.