வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வெள்ளி, 24 ஆகஸ்ட் 2018 (12:44 IST)

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுஷ்கா-விராட் கோலி செய்த உதவி

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் எத்தனை நாட்கள் ஆகும் என்று தெரியவில்லை. மக்கள் நிலைக்கு திரும்புவதற்கு பலர் நிதியுதவி அளித்து வருகிறார்கள். 
நடிகர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், மாணவர்கள் உள்பட பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் கிரிக்கெட்  வீரர் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா கேரள மக்களுக்கு நிதி உதவி அளித்தது மட்டுமல்லாமல், அங்குள்ள விலங்குகளை பாதுகாக்கவும் உதவிகளை செய்து வருகிறார்கள் அவர்களின் இந்த செயலை பலரும் வரவேற்றுள்ளனர்.