ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வெள்ளி, 24 ஆகஸ்ட் 2018 (12:41 IST)

விஜய், கேரள மக்களுக்கு பணத்தையும் தாண்டி செய்த உதவி

நடிகர் விஜய்க்கு தமிழகம் மட்டுமின்றி கேரளாவிலும் அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்கள்ளுக்கு உதவும் பொருட்டு விஜய் 70 லட்சம் ரூபாய் நிதி அளித்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இது தமிழ் நடிகர்களில் மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

வெறும் நடிப்பதோடு மட்டுமல்லாமல், மக்களின் மீதும் அதிக அக்கறை கொண்டவர் விஜய். கேரள மக்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் .  அவர்களுக்கு நடிகர் விஜய் ரூபாய் 70 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.



அதுமட்டுமல்லாமல் கேரளாவில் உள்ள விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு தனித்தனியாக பணம் அனுப்பி உதவுமாறு வலியுறுத்தியுள்ளார். அத்துடன் லாரி நிறைய மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை கேரளாவுக்கு அனுப்பி  உள்ளார் அந்த பொருட்களில் நீங்களே பாருங்கள்.