1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 23 ஆகஸ்ட் 2018 (20:26 IST)

கேரளாவிற்கு இருதய சிகிச்சை பணத்தை தானமாக வழங்கிய கரூர் மாணவிக்கு குவியும் நிதிகள்!

கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படும்  கேரளாவை வரலாறு காணாத மழை புரட்டிப் போட்டிருக்கிறது. எங்கும் மரண ஓலம். கேரளாவுக்கு பணம், உணவுப்பொருள்கள், உடைகள் என்று இந்தியாவே வாரிவழங்கிக் கொண்டிருக்கிறது. 
 
இந்நிலையில், தனது இதய ஆபரேஷனுக்காக சமூக வலைதளங்கள் மூலம் திரட்டிய பணத்தில் 5000-த்தை கேரள வெள்ள நிவாரணத்துக்கு வழங்கி நெகிழச் செய்திருக்கிறார் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அட்சயா என்ற சிறுமி. 
 
இந்த சம்பவம் நமது ஊடகத்தின் வழியாக வெளியானது. இந்நிலையில், யார் என்று தெரியாமல், முகநூல் வழியாகவே, இவரது மருத்துவ செலவிற்காக ரூ.60 ஆயிரம் பணம் அவரது வங்கி கணக்கில் கொடுத்துள்ளனர். 
 
மேலும், இன்று சேலம் காங்கிரஸ் பிரமுகர் ர.மோகன் குமாரமங்கலம் முதல் கட்ட நிதியாக ரூ 25 ஆயிரம் பணத்தினை அவரது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டதோடு, அந்த காங்கிரஸ் பிரமுகர் வழியான டிரஸ்ட் மூலம், அந்த சிறுமியின் சிகிச்சை செலவு மற்றும் அந்தசிறுமி ஐ.ஏ.எஸ் படிப்பதாக கூறியதையடுத்து படிப்பு செலவினையும் ஏற்றுக் கொள்வதாக அவர் தெரிவித்தார். 
 
அந்த சிறுமி, அவரது நிதி உதவிக்கு நன்றி தெரிவித்ததோடு, எல்லோரும் நன்கு இருக்க, தான் ஐ.ஏ.எஸ் படித்து அனைவருக்கும் சேவை செய்வேன் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.