வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 24 ஆகஸ்ட் 2018 (08:24 IST)

மாட்டிறைச்சி சாப்பிடாதவர்களுக்கு மட்டும் உதவுங்கள்: சாமியாரின் சர்ச்சை பேச்சு

கேரளாவில் சமீபத்தில் ஏற்பட்ட கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அமைப்புகளில் இருந்து உதவிகள் குவிந்து வரும் நிலையில் சாமியார் சக்ரபாணி மகாராஜ் என்பவர், 'கேரளாவில் மாட்டிறைச்சி சாப்பிடாதவர்களுக்கு மட்டும் உதவி செய்யுங்கள்' என்று கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
சமீபத்தில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த சாமியார் சக்ரபாணி மகாராஜ் கூறியதாவது: கேரள மக்களுக்கு உதவுமாறு நான் அனைத்து இந்துக்களையும் கேட்டுக்கொள்கிறேன். ஆனால், அதே நேரத்தில் அந்த உதவியானது இயற்கையை மதிப்பவர்களுக்கும் ஜீவராசிகளைப் பேணுபவர்களுக்கும் மட்டுமே இருக்க வேண்டும். 
 
எந்தப் பிரச்சினையும் இல்லாமல் ரொட்டி கிடைத்தபோது கேரளவாசிகள் சிலர் கோமாதாவை வதைத்து அந்த இறைச்சியை சாப்பிட்டனர். ஆகையால் மாட்டிறைச்சியை உண்ணாதவர்களுக்கு மட்டுமே இந்துக்கள் உதவ வேண்டும்" என்று கூறியுள்ளார்.
 
ஒரு மாநிலமே பேரிடரில் இருக்கும்போது இதுபோன்று பிரிவினையை தூண்டும் வகையில் சாமியார் சக்ரபாணி மகாராஜ் பேசியுள்ளதாக கடும் கண்டனங்கள் பல்வேறு தரப்பில் இருந்து எழுந்து வருகிறது