செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 1 டிசம்பர் 2021 (17:59 IST)

ஆந்திர மாநிலத்தில் வெள்ளம்: சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு ரூ. 25 லட்சம் நிதியுதவி

ஆந்திர மாநிலத்தில் வெள்ளம் பாதித்துள்ள  நிலையில், சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு ரூ. 25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். 

ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.  தற்போது அமமாநிலத்தில் மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு தனது டுவிட்டர் பக்கத்தில், ஆந்திர மாநில முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் நிதி அளிப்பதாகவும் இதேபோல் பலரும் நிதி அளிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ளார்.