வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 26 நவம்பர் 2021 (16:23 IST)

பென்சிலை தரமாட்றான்.. புடிச்சு உள்ள போடுங்க சார்! – புகார் கொடுக்க வந்த பள்ளி சிறுவர்கள்!

ஆந்திராவில் பென்சில் தகறாரை போலீஸ் ஸ்டேஷன் வரை கொண்டு சென்ற பள்ளி சிறுவர்களின் வீடியோ வைரலாகியுள்ளது.

ஆந்திராவின் குர்னூல் கிராமத்தில் உள்ள காவல் நிலையம் அருகே பள்ளிக்கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த பள்ளியிலிருந்து ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவர்கள் சிலர் காவல் நிலையத்திற்கு வந்துள்ளனர்.

அவர்களை விசாரித்தபோது சிறுவன் ஒருவன் மற்றொரு சிறுவனை காட்டி அவன் தனது பென்சிலை தர மறுப்பதாக குற்றம் சாட்டியுள்ளான். அதற்கு என்ன செய்ய வேண்டும் என கேட்க அந்த சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என இந்த சிறுவனும் சொல்ல போலீஸார் அவர்களின் குழந்தைத்தனம் கண்டு சிரித்துள்ளனர். பின்னர் இரு சிறுவர்களுக்கும் இடையே சமரசம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.