திங்கள், 3 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 3 மார்ச் 2025 (12:49 IST)

எகிறிய கடன்! நடிகர் திலகம் சிவாஜியின் வீடு ஜப்தி! - நீதிமன்றம் உத்தரவு!

sivaji

படத்தயாரிப்புக்காக வாங்கிய கடன் திரும்ப செலுத்தப்படாத விவகாரத்தில் நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழ் சினிமாவில் நடிப்புக்கான மிகப்பெரும் அடையாளமாக போற்றப்பட்டவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவரது மகன் பிரபு, பேரன் விக்ரம் பிரபு என பலரும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகின்றனர். சிவாஜியின் சொந்த வீடு சென்னையில் உள்ள தி.நகரில் அன்னை இல்லம் என்ற பெயரில் உள்ளது.

 

சிவாஜியின் பேரன் துஷ்யந்த், திரைப்பட தயாரிப்புக்காக ரூ.3.75 கோடி கடன் பெற்ற நிலையில் அது வட்டியுடன் சேர்த்து 9.39 கோடியாக உயர்ந்துள்ளது. ஆனால் வட்டியையும், கடனையும் திரும்ப செலுத்த தவறியதால் இது தொடர்பாக வழக்கு மேற்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நடிகராக விளங்கிய சிவாஜி கணேசனின் வீடு கடன் பிரச்சினையால் ஜப்தி செய்யப்படுவது அவரது ரசிகர்களை வருத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

 

Edit by Prasanth.K