தூத்துக்குடியில் ஒரே நாளில் 25 செ.மீ மழை: வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பரபரப்பு!
தூத்துக்குடியில் ஒரே நாளில் 25 செ.மீ மழை: வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பரபரப்பு!
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 25 சென்டி மீட்டருக்கு அதிகமாக மழைபெய்து உள்ளதை அடுத்து அம்மாவட்டத்தில் உள்ள பல இடங்கள் வெள்ளத்தால் தத்தளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
வஙகக்கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் தமிழகத்தில் மிக கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 25 சென்டி மீட்டர் மழை பெய்து உள்ளதாகவும் இதன் காரணமாக அம்மாவட்டத்தில் உள்ள பல இடங்கள் வெள்ளப்பெருக்கில் சிக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் பத்தாயிரம் வீடுகளுக்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்து உள்ளதாகவும் இதனை அடுத்து அந்த வீடுகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.