1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 12 டிசம்பர் 2017 (11:54 IST)

முதலில் நடிகர் சங்க கட்டடம் அப்புறம் தான் எல்லாம்; டுவீட்டிய கார்த்தி

விஷால் நடிகர் சங்கத்தில் போட்டியிடும் போது முதலில் கட்டடம் கட்டுகிறோம் பிறகு தான் எனக்கு திருமணம் என்று கூறியிருந்தார். அதன்படி சங்கத்தில் ஜெயித்து பணம் ஏற்பாடு செய்யும் வேலைகளில் குழு பரபரப்பாக வேலை செய்தனர்.
நடிகர் சங்கக் கட்டிடம் கட்டிய பிறகே திருமணம் செய்து கொள்வேன் என்று நடிகர் விஷால் தெரிவித்திருந்தார். தற்போது  மலேசியாவில் நடிகர் சங்கம் சார்பில் பிரம்மாண்ட நிகழ்ச்சி ஒன்றும் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் நடிகர் சங்க செயலாளராக இருக்கும் விஷால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தது தனக்குப்  பிடிக்காத்தால், தான் வகித்துவரும் நடிகர் சங்க துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக நடிகர் சங்கத் தலைவர்  நாசரிடம் கடிதம் கொடுத்துள்ளார் பொன்வண்ணன். நடிகர் சங்கத்தில் பதவியேற்கும்போது, எந்த அரசியல் கட்சியையும் சாராமல்  இருக்க வேண்டும் என்று உறுதியேற்றுக் கொண்டதாகவும், ஆனால் விஷால் அதிலிருந்து விலகியிருப்பதாகவும்  பொன்வண்ணன் தெரிவித்துள்ளார். 
 
நடிகர் பொன்வண்ணன் அவர்கள் சங்க உறுப்பினர் பதவியில் தொடர வேண்டும் என்பதற்காக, அவர் தன்னுடைய ராஜினாமா கடிதத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்வதற்காக கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நடிகர் கார்த்தி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், சங்க கட்டடம் கட்டறோம், அப்புறம் தான் எல்லாம், விஷால் கல்யாணம் உட்பட என டுவீட் செய்திருக்கிறார்.