வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 8 டிசம்பர் 2017 (19:00 IST)

சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த வழக்கமான ரிசல்ட்

சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள் அனைத்துமே குடும்பத்துடன் பார்க்கும் வகையில் குறிப்பாக குழந்தைகள் ரசிக்கும் வகையில் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. இதனால் அவர் படங்களில் சிகரெட் பிடிக்கும் காட்சிகளில் கூட நடிப்பதில்லை

இதனால் இதுவரை வெளியான சிவகார்த்திகேயனின் அனைத்து படங்களும் 'யூ' சான்றிதழே தணிக்கையில் பெற்று வந்தது. இந்த நிலையில் சற்றுமுன்னர் சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்' படத்தின் தணிக்கை தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த படமும் வழக்கம்போல் 'U' பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தணிக்கை சான்றிதழ் கிடைத்த ஒருசில நிமிடங்களில் ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டர் ஒன்றும் இணையதளங்களில் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வரும் 22ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.