செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 9 டிசம்பர் 2017 (22:03 IST)

இதுதான் சிவகார்த்திகேயன் படத்தின் டைட்டிலா?

சிவகார்த்திகேயன் - சமந்தா நடிக்கும் படத்திற்கு, ‘சீம ராஜா’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

 
சிவகார்த்திகேயனுக்கு ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்ற மாபெரும் ஹிட்டைக் கொடுத்த பொன்ராம், அடுத்து ‘ரஜினி முருகன்’ என்ற ஹிட்டையும் கொடுத்தார். தற்போது, மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயனை இயக்கி வருகிறார் பொன்ராம். தென்காசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.
 
இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். காமெடியனாக சூரி நடிக்கும் இந்தப் படத்திற்கு, டி.இமான் இசையமைக்கிறார். இந்தப் படத்தை 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கப்படாத நிலையில், ‘சீம ராஜா’ என்ற பெயர் பரிசீலனையில் உள்ளதாகத் தெரிகிறது.