வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 11 டிசம்பர் 2017 (16:19 IST)

டக் அவுட் தினேஷ் கார்த்திக்: சோதனையிலும் புதிய சாதனை....

இந்தியா வந்துள்ள இலங்கை அணி மூன்று டெஸ்ட் போட்டி, மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில், இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. 
 
தற்போது மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதையடுத்து, இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. 
 
அதன்படி முதல் களமிறங்கிய இந்திய அணி மோசமாக விளையாட்டை வெளிபடுத்தியது. தோனி மட்டும் ஒருபக்கம் களத்தில் போராடி அரைசதம் அடித்தார். இதனால் இந்திய அணி 100 ரன்களை கடந்தது. 
 
112 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட் ஆனது. இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.  நேற்றைய போட்டியில், ஷிகர் தவான் ரன்கள் ஏதும் எடுக்காமல், டக் அவுட்டானார். இதற்கு அடுத்து வந்த தினேஷ் கார்த்திக்கும் டக் அவுட் முறையில் வெளியேறினார். இந்நிலையில், அதிக பந்துகள் எதிர்கொண்டு டக் அவுட் ஆனவர்கள் பட்டியலில் தினேஷ் கார்த்திக் முதலிடம் பிடித்துள்ளார்.
 
இதற்கு முன்னர் சோல்கர் (17 பந்துகள்), ராமன் (16) மற்றும் கங்குலி (16) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.