1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 9 டிசம்பர் 2017 (22:00 IST)

யு சான்றிதழ் பெற்ற வேலைக்காரன்

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள வேலைக்காரன் படத்திற்கு 'யு' சான்றிதழ் கிடைத்துள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா முதல்முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர். மேலும் முக்கிய வேடத்தில்  ஃபகத் ஃபாஸில், சினேகா, பிரகாஷ் ராஜ், தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், ஆர்.ஜே. பாலாஜி, யோகி பாபு, விஜய் வசந்த், சதீஷ்  ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர்  ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அண்மையில் படத்தில் இசை வெளியிட்டு விழா  நடைபெற்றது. பாடல்கள் அனைத்து நன்றாக வந்துள்ளது.
 
இப்படம் திறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வருகிற டிசம்பர் 22ஆம் தேதி உலகம் எங்கும் திரையிடப்பட உள்ளது.  இந்நிலையில் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளதாக இயக்குநர் மோகன்ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில்  அறிவித்துள்ளார்.