செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 15 ஜூன் 2021 (22:22 IST)

விஜய் மகன், மகள் பெயரில் போலி சமூக வலைதள கணக்குகள் !

நடிகர் விஜய் மகன் மற்றும் மகளின் பெயரில் போலி சமூகவலைதள அக்கவுண்ட்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியை அடைந்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர் விஜய். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் மாஸ்டர். இதையடுத்து, நடிகர் விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய்65 என்ற பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், விஜய்யின் மகன் சேசஜ் விஜய் என்ற மகனும், திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இருவரின் பெயரில் போலி சமூக வலைதளக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது.

இதில் விஜய் ரசிகர்கள் ஃபாலோயர்களாக உள்ளனர்.எனவே இதுபோன்ற போலி ஐடிக்களிடம் இருந்து பாதுகாப்புடன் இருக்க வேண்டுமென விஜய் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இயக்குநர் மணிரத்னம், செந்தில் ஆகிய பெயரில் போலி அக்கவுண்டுகள் தொடங்கப்பட்ட நிலையில், விஜய் மகன், மகள் ஆகிய இருவரின் பெரிய போலி அக்கவுண்ட் உருவாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.