1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 15 ஜூன் 2021 (16:00 IST)

விஜய்யின் வாரிசுகள் பெயரில் போலி சமூகவலைதளக் கணக்குகள்!

நடிகர் விஜய்யின் குழந்தைகள் பெயரில் போலியாக சமூகவலைதளக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் விஜய். அவரின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் கவனிக்கப்பட்டு செய்தியாக்கப்படுகின்றன. இந்நிலையில் விஜய்யின் மகன் சஞ்சய் மற்றும் மகள் சாஷா ஆகியோர் பெயரில் போலியாக சமூகவலைதளக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. வழக்கமாக பிரபலங்களின் பெயரில்தான் போலிக் கணக்குகள் தொடங்கப்படும். ஆனால் இப்போது பிரபலங்களின் குடும்பத்தினர் பெயரில் போலியாக கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.