செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 9 ஜூன் 2021 (23:25 IST)

’’விஜய் மக்கள் இயக்கம்’’ மக்களுக்கு உதவி !

நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள  மக்களுக்கு இலவச உணவு வழங்கப்பட்டது.  

இந்தியாவில் கொரொனா இரண்டாம் அலைத் தொற்று வேகமாகப் பரவி வந்த நிலையில் சில நாட்களாக இதன் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் குறைந்துள்ளது.

இந்நிலையில், ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்காக தனியார் தொண்டு நிறுவனங்கள், சினிமா நட்சத்திரங்கள் மற்றும் தொழிலதிபர்கள் உதவி வருகின்றனர்.

இந்நிலையில், விஜய் ரசிகர்கள் மக்களுக்கு நாள்தோறும் சாப்பாடு வழங்கி உதவி செய்து வருகின்றனர்.

மதுரை தெற்கு மாவட்ட தலைமைத் தளபதி நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில், உள்ள காளவாசலில் இன்று 50 சாப்பாடுகள் அங்குள்ள மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.  

விஜய் ரசிகர்களின் சேவை அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.