செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : செவ்வாய், 15 ஜூன் 2021 (08:11 IST)

மொட்டை ராஜேந்திரன் உடன் தளபதி விஜய்யின் வாரிசுகள்: வைரல் புகைப்படம்!

மொட்டை ராஜேந்திரன் உடன் தளபதி விஜய்யின் வாரிசுகள்: வைரல் புகைப்படம்!
தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் ஒருவரான மொட்டை ராஜேந்திரனுடன் தளபதி விஜய்யின் மகன் சஞ்சய், மகள் திவ்யா ஆகிய இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது
 
தளபதி விஜய்யின் நடித்த தெறி உள்பட ஒருசில படங்களில் மொட்டை ராஜேந்திரன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் தளபதி விஜய்யின் குட் புக்கில் இடம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்று முன்னர் தளபதி விஜய்யின் மகன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா ஆகிய இருவருடனும் மொட்டை ராஜேந்திரன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் தளபதி விஜய் தற்போது நடித்து வரும் தளபதி 65 திரைப்படத்திலும் மொட்டை ராஜேந்திரன் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது