வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 15 ஜூன் 2021 (12:34 IST)

விக்ரம் படத்தில் இவரும் இருக்கிறாரா? பிரபல நடிகர் வெளியிட்ட புகைப்படம்!

கமல் நடிப்பில் அடுத்து உருவாக உள்ள விக்ரம் படத்தில் நடிகர் நரேனும் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பின்னர் இயக்குனர் லோகேஷ் கமலை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்க உள்ளார்.  இதற்கான போட்டோஷூட் எல்லாம் நடந்து முடிந்திருந்தாலும், கமல் தேர்தலில் பிஸியாக இருந்ததால் படப்பிடிப்பு தள்ளிப்போனது. தேர்தலில் கமல் தோல்வி அடைந்ததை அடுத்து இப்போது படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த படத்தில் ஏற்கனவே விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கும் நிலையில் இப்போது நரேனும் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக வயதான கெட்ட்ப்பில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ள அவர் அந்த புகைப்படத்தை எடுத்தது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எனக் கூறியதால் இப்படி பலரும் சொல்ல ஆரம்பித்துள்ளனர். ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.