செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 15 ஜூன் 2021 (13:20 IST)

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த விஜய் சேதுபதி!

நடிகர் விஜய் சேதுபதி இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலினை சந்தித்துள்ளார்.

கொரோனா இரண்டாம் அலை உச்சக்கட்டத்தில் இருந்த போது தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் பொறுப்பேற்றார். அரசு மற்றும் அதிகாரிகளின் சிறப்பான செயல்பாட்டால் இப்போது கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலைத் தடுக்க முதல்வர் மக்களிடம் நிவாரண நிதியளிக்கும் படி கேட்டிருந்தார். அதையடுட்து பொதுமக்கள் பலரும் பிரபலங்களும் நிவாரண நிதியளித்தனர்.

இந்நிலையில் இன்று நடிகர் விஜய் சேதுபதி தலைமை செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலினை சந்தித்து 25 ரூபாய்க்கான காசோலையை நிவாரண நிதிக்காக அளித்தார்.