வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 30 ஜனவரி 2021 (15:35 IST)

காந்தி சிலை உடைப்பு…மனம் உடைகிறேன் – வைரமுத்து டுவீட்

அமெரிக்காவில் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்குப் பல்வேறு நாட்டுத் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள், காந்தியவாதிகள்ன் ஆகியோர் குரல் எழுப்பி வருகின்றனர். இதற்கு கவிஞர் வைரமுத்து மனம் உடைகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நாட்டில் கலிஃபோர்னியா மாகாணத்தில் மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வாஷிங்டனிலுள்ள இந்திய தூதரம் இதற்கு நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க அரசு சரிசெய்வதாக கூறியுள்ளது.

இந்நிலையில்  காந்தி சிலை உடைப்பு குறித்து, கவிஞர் வைரமுத்து கூறியுள்ளதாவது: அமெரிக்காவில்
காந்தி சிலை மண்ணில்
வீழ்த்தப்பட்டது கண்டு
மனம் உடைகிறேன்.

உலகமெல்லாம்  காந்தியை
மாற்றி மாற்றிக் கொல்லலாம்.

ஆனால், ஒருபோதும்
அகிம்சை சாவதில்லை.
#Gandhi  எனத் தெரிவித்துள்ளார்.