எம்.ஜி.ஆர் வாழ்வு ஒரு பத்தாண்டுத் திட்டம் – வைரமுத்து டுவீட்
தமிழ் சினிமாவில் இரண்டாவது சூப்பர் ஸ்டார் எம்.ஜி.ஆர். தனது தலைவராக அண்ணாவை ஏற்றுக்கொண்டு அவரது புகைப்படத்தை தனது கொடியில் சின்னமானவே ஆக்கி, முதல் தேர்தலிலேயே சட்டமன்றத் தேர்தலில் வெற்றிக் கொடி நாட்டியவர் எம்.ஜி.ஆர்.
இப்போதும் அவரது பெயருக்கும் அவருக்குமான செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகிறது என்பதற்கு அவர் பெயரைக் கூற அனைத்துக் கட்சிகளும் போட்டிபோடுவதே சாட்சி.
இந்நிலையில் இன்று எம்ஜிஆரின் 33 வது நினைவுதினத்தை முன்னிடு அவருக்கு முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட அனைத்துக் கட்சி பிரமுகர்களும் அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் எம்ஜிஆர் குறித்து ஒரு பதிவிட்டுள்ளார்.
அதில், எம்.ஜி.ஆர் 1917 – பிறக்கிறார் 1927 – நாடகம் நடிக்கிறார் 1937 – திரையுலகில் அறியப்படுகிறார் 1947 – கதாநாயகனாகிறார் 1957 – நாடோடி மன்னன் தயாரிக்கிறார் 1967 – சட்டமன்ற உறுப்பினர் 1977 – முதலமைச்சர் 1987 – வாழ்வு நிறைகிறார் எம்.ஜி.ஆர் வாழ்வே ஒரு பத்தாண்டுத் திட்டம். எனத் தெரிவித்துள்ளார்.