1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: திங்கள், 18 செப்டம்பர் 2017 (10:53 IST)

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட வையாபுரி; சோகத்தில் மற்ற போட்டியாளர்கள்

பிரபல தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் முடிவடையும் நிலையில் உள்ளது. இன்னும், 15 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், இன்றைய எலிமினேஷனிலிருந்து வையாபுரி வித்தியாசமான முறையில் வெளியேற்றப்பட்டார்.

 
நடிகர் கமல்ஹாசன் நேற்று பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று போட்டியாளர்களை சந்தித்து, அந்த வாரம் கொடுக்கப்பட்ட  டாஸ்குகளில் எது கஷ்டமாக இருந்தது என கேட்டார். அதற்கு அனைவரும் கயிறு சிக்கலை நீக்கும் போட்டி என கூறினர்.
 
போட்டியாளர்கள் யாரும் அந்த சிக்கலை நீக்கமுடியாத நிலையில் கமல் அதை சில நொடிகளில் செய்துவிட்டார். அதை பார்த்து  போட்டியாளர்கள் ஷாக் ஆகிவிட்டனர். மேலும் இன்று சினேகன் கோல்டன் டிக்கெட் வென்று முதல் இடத்திலும், ஆரவ் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். கோல்டன் டிக்கெட் வைத்திருப்பவரை 100 நாட்கள் வரை நாமினேட் செய்யவே முடியாது. அதனால் 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் சினேகன் இருப்பது உறுதியாகிவிட்டது.
 
ஏற்கனவே எலிமினேஷன் பட்டியலில் சிநேகன், வையாபுரி, ஹரிஸ் மற்றும் சினேகன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். ஹரிஸ் மற்றும் சிநேகன் காப்பாற்றப்பட்ட நிலையில், வையாபுரி வெளியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டார்.
 
இதனை தொடர்ந்து பிந்து கண்ணீர் விட்டு அழுதார். மற்ற பிக்பாஸ் போட்டியாளர்களும் சோகத்தில் உள்ளனர்.