வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : வியாழன், 14 செப்டம்பர் 2017 (13:46 IST)

பிக்பாஸ் வீட்டில் இருக்க வேண்டும் என்ற ஆசை போய்விட்டது; ஓரவஞ்சனை செய்வதாக சிநேகன் புலம்பல் - ப்ரொமோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிகட்ட போட்டிகள் கடுமையாக நடந்து வருகிறது. போட்டியாளர்கள் காரில் இருக்கவேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் இறுதியாக 20 மணி நேரம் காருக்குள் சினேகனுடன் சுஜா மட்டுமே போட்டியை தொடர்ந்தார்.

 
போட்டியின் நேரம் செல்ல செல்ல இருவரும் விட்டு கொடுக்காத நிலையில், ஒற்றை காலில் நிற்கவேண்டும் என கூறப்பட்டது,  அப்போது சிநேகன் காலை கார் மீது வைத்தார் என கணேஷ் குற்றம்சாட்டினார். இதனால் கணேஷ்-சிநேகன் இடையே வாக்குவாதம் நடந்தது. “நான் இப்படி ஏமாற்றி தான் ஜெயிக்கவேண்டும் என்கிற அவசியமில்லை” என சினேகன் நீண்ட நேரம் கூறிக்கொண்டிருந்தார், ஆனால் இறுதியில் சுஜா வென்றதாக இறுதியில் அறிவிக்கப்பட்டது அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது.
 
நான் 20 மணி நேரத்திற்கும் மேல் போராடி போட்டியில் விளையாடினால் ஏமாற்றினேன் என கூறுவது பொறுத்து கொள்ள  முடியாது என சினேகன் கதறி அழுதார். “நீங்கள்லாம் முடிவு செஞ்சு விட்டுத்தர சொன்னாக் கூட வந்திட்டு இருப்பேன்”  என்பதே சிநேகனின் புலம்பலாக இருந்தது.
   
இந்நிலையில் தற்போது வந்துள்ள ப்ரொமோவில், நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்து நான் கண்டிப்பாக ஜெயிப்பேன் என்று  உறுதியாக இருந்து சிநேகன் அண்மையில் நடந்த சில விஷயங்களால் 100 நாள் இருக்க வேண்டும் என்ற ஆசை போய்விட்டது, என மனம் உடைந்து பிந்து மாதவியிடம் பேசுகிறார். அதற்கு அவ்வளவு ஈஸியா சொல்லாதீங்க என்று கூறினார் பிந்து.  தொடர்ந்து கூறுகையில், நான் எவ்வளவோ கேம்ல தோற்று இருக்கிறேன், அப்போதெல்லாம் அது என்னால முடியலை  என்பதை ஏற்றுக்கொண்டிருக்கிறேன். ஆனால் இது முடிவு கிடையாது என்றும், இதுல பார்ஷியாலிட்டி (ஓரவஞ்சனை) பார்ப்பது எனக்கு பிடிக்கவில்லை என்றும் கூறுகிறார் சிநேகன்.
 
சுஜா என்னோட பாயிண்ட்ஸ் வேண்டும் என்றால் எடுத்துகோங்கன்னு சொல்வது சரியில்லை. அப்படி சொல்லி ஒருவரை லூஸ் பண்ணாதீங்க என்று புலம்பி தள்ளுகிறார். இதனால் வரும் நாட்களில் நடக்கும் போட்டிகளை பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் கடுமையாக மேற்கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை. மேலும் வீட்டில் பல பிரச்சனைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.