புதன், 26 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வியாழன், 14 செப்டம்பர் 2017 (11:47 IST)

சிநேகன், சுஜா இடையே நடந்த போட்டி; கருத்து தெரிவித்த ஆர்த்தி

பிக்பாஸ் வீட்டில் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது அதில் “காருக்குள்ள யாரு, கடைசியா பாரு” என்கிற சவாலுக்காக சிநேகனும் சுஜாவும் காருக்குள் சோர்வாக அமர்ந்திருந்தனர். இருவரும் விட்டுக்கொடுக்காமல் பிடிவாதமாக அமர்ந்திருந்ததால் அதை நிறைவுக்கு கொண்டு வரும் விதமாக அறிவிப்பு வந்தது.

 
இந்நிலையில் இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் எவராவது ஒருவர் வெளியே வர வேண்டும். அவர்கள் இதற்காக தங்களுக்குள்  ஆலோசனை செய்யலாம். ஒரு மணி நேரம் கடந்த பிறகும் அவர்கள் இறங்கவில்லையென்றால், இதர போட்டியாளர்கள் கூடிப் பேசி காருக்குள் இருக்கும் ஒருவரை தேர்ந்தெடுத்து அவரை கட்டாயமாக வெளியேற்றலாம். 
 
சுஜாவை வெளியே வரவேண்டும் என இதர போட்டியாளர்கள் முடிவெடுத்து, இந்த விஷயத்தை சிநேகன் மற்றும் சுஜாவிடம் தெரிவித்தனர். பிறகு சரி. முதல்ல அவங்களுக்குள்ள பேசிக்கட்டும். அப்புறம் நாம வருவோம் என்று கிளம்பினர். 
 
இந்நிலையில் சிநேகன், சுஜா இடையே நடந்த போட்டியில் சிநேகன் ஏமாற்றினார் என கூறி அவர் தோற்றதாக  அறிவிக்கப்பட்டது. காரின் ஓரத்தில் அவர் கால் உரசியதற்காக இப்படி செய்தது சரியில்லை என நடிகை ஆர்த்தி  தெரிவித்துள்ளார்.
 
சுஜா, சிநேகன் ஆகிய இருவருக்கும் புள்ளிகளை பகிர்ந்தளித்திருக்கவேண்டும், அதுவே சரியானதாக இருக்கும் என்றும் அவர்  கருத்து தெரிவித்துள்ளார்.