1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வியாழன், 14 செப்டம்பர் 2017 (15:00 IST)

டாஸ்க்கை பார்த்து கடுப்பில் டிவியை ஆஃப் செய்த நடிகை ஸ்ரீப்ரியா

பிக்பாஸ் வீட்டில் சிநேகன், சுஜா இடையே கடும் போட்டி நிலவியது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் காமெடி டாஸ்க்குகள் கொடுத்து வந்தார். தற்போது கடுமையான டாஸ்க்குகளை கொடுத்து வருகிறார் பிக்பாஸ்.

 
 
இந்நிலையில்தான் கார் டாஸ்க் கொடுத்தார் பிக்பாஸ். இருவரும் காரிலேயே தூங்கி எழுந்து எதுவும் சாப்பிடாமலும், இயற்கை  உபாதைகளுக்கு கூட போகாமல் இருந்தார்கள். இந்த நிலையில் பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்கை பார்த்து கடுப்பாகி நடிகை ஸ்ரீப்ரியா தனது டிவியை ஆஃப் செய்துள்ளார்.
 
பிக்பாஸ் நிகழ்ச்சியை தினமும் பார்த்து ட்வீட் பண்ணும் நடிகை ஸ்ரீப்ரியா கார் டாஸ்க்கை பார்த்து கடுப்பாகிவிட்டார். இதனால்  கார் டாஸ்க் கொடுமை முடிந்தவுடன் தனக்கு ட்வீட் செய்யுமாறு ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டார் ஸ்ரீப்ரியா. ஆளுக்கு 10 கொடுத்து முடிங்கப்பா என்று ட்விட்டரில் கூறியுள்ளார்.
 
இறுதியாக 20 மணி நேரம் காருக்குள் சினேகனுடன் சுஜா மட்டுமே போட்டியை தொடர்ந்தார். இவர்கள் கஷ்டப்பட்டதை பார்த்த  பார்வையாளர்கள் இருவருக்கும் சமமான பாயிண்ட்ஸ் கொடுத்து இருவரும் வெற்றியாளர்கள் என்று அறிவித்திருக்கலாமே  என்று ஸ்ரீப்ரியா தெரிவித்துள்ளார்.
 
டாஸ்க் முடிந்து சுஜா வென்றுவிட்டதாகவும், பிக்பாஸ் பார்ஷியாலிட்டி பார்க்கிறார் என்றும் ரசிகர்களில் ஒருவர் ட்விட்டரில்  தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போதுள்ள ப்ரொமோ வீடியோவில், சிநேகனும் இதே கருத்தை பிந்துவிடம் கூறி புலம்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.