வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 2 ஜூன் 2020 (07:04 IST)

மணிரத்னத்தின் அடுத்த படத்தில் இவர்தான் ஹீரோ! பொன்னியின் செல்வனுக்கு கொஞ்சம் ஓய்வு!

மணிரத்னம் இயக்க இருக்கும் அடுத்தபடத்தில் நடிகர் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.

மணிரத்னம் தனது கனவுப்படைப்பான பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பை இரண்டு கட்டங்களாக நடத்தி முடித்தார். படத்தில் நடிக்கும் கார்த்தி, ஜெயம்ரவி உள்ளிட்ட நடிகர்கள் அதில் கலந்துகொண்டனர். இந்நிலையில் கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் பணிகள் பாதியிலேயே நிற்கின்றன.

இப்போதுள்ள சூழ்நிலையில் தயாரிப்பு தரப்பில் 100 கோடி ரூபாய் அளவுக்கு பட்ஜெட்டை குறைக்க சொல்லியுள்ளதாக தகவல் வெளியானது. இதனால் கொஞ்ச காலத்துக்கு பொன்னியின் செல்வனை மீண்டும் ஓரங்கட்டி வைத்துவிட்டு தன்னுடைய மெஹா ஹிட் படமான ரோஜாவின் இரண்டாம் பாக திரைக்கதையை மணிரத்னம் எழுதி வருகிறார் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்தில் கதாநாயகனான துல்கர் சல்மான் நடிக்க இருக்கிறார்.

இந்த இடைப்பட்ட காலத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் நடிகர்கள் தங்கள் வேறு படங்களில் நடித்து முடித்து வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.