1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 1 ஜூன் 2020 (20:00 IST)

பொன்னியின் செல்வனைக் கிடப்பில் போட்ட மணிரத்னம் – பார்ட் 2 திரைக்கதை ரெடி!

பொன்னியின் செல்வன் படத்தின் பட்ஜெட் செலவுகளைக் குறைக்க சொன்னதால் இப்போது மணிரத்னம் வேறு ஒரு படத்தை முதலில் இயக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டில் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த படப்பிடிப்பில் கார்த்தி மற்றும் ஜெயம்ரவி சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்நிலையில் அடுத்தக் கட்ட படப்பிடிப்புக்கான திட்டங்களை வகுத்த போது கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் தயாரிப்பு தரப்பில் 100 கோடி ரூபாய் அளவுக்கு பட்ஜெட்டை குறைக்க சொல்லியுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் மணிரத்னம் ஒரு வித்தியாசமான திட்டம் தீட்டி வருகிறார். கொரோனாவுக்குப் பின் நிலைமை சரியாகும் வரை காத்திருந்துவிட்டு மீண்டும் அதைத் தொடங்க உள்ளார். அதற்காக இப்போது குறைந்த பட்ஜெட்டில் ஒரு படம் இயக்க முடிவு செய்துள்ளார். அதற்காக தன்னுடைய மெகா ஹிட் படமான ரோஜாவின் திரைக்கதையை எழுதி வருகிறார்.