திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: செவ்வாய், 19 மே 2020 (17:14 IST)

இளையராஜாவின் ஆஸ்தான ’’டிரம்மர்’’ புருஷோத்தமன் மறைவு !

இளையராஜவின் ஆஸ்தான இசைக் கலைஞர்களில் ஒருவரான புருஷோத்தமன் வயது முதிர்வு காரணமாக   உடல் நலமில்லாமல் இருந்தார்.

இதற்காக அவர் ஒரு மாத காலமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று காலமானார்.

இளையராஜாவின் முதல் படமான அன்னக்கிளியில் இருந்து பல்வேறு பாடல்களுக்கு புருஷோத்தமன் டிரம்ஸ் இசைக்கலைஞராக பணியாற்றியுள்ளார். அத்துடன் இளையராஜாவிடம் இசை கண்டக்டராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த புருஷோத்தமனின் மனைவி கடந்த  இரண்டு மாதங்களுக்கு முன்னர் இறந்தார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இசைக்கலைஞர் புருஷோத்தமனின் மறைவுக்கு இசைக் கலைஞர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.