செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 26 டிசம்பர் 2021 (11:02 IST)

பிக்பாஸ் வீட்டில் இன்று டபுள் எவிக்சன்: யார் யார் வெளியேறுகிறார்கள்?

பிக்பாஸ் வீட்டில் இன்று டபுள் எவிக்சன் நடைபெற இருப்பதாகவும் போட்டியாளர்கள் இருவர் இன்று வெளியேறி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
பிக் பாஸ் சீசன் 5 தொடங்கியதிலிருந்து ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் மட்டுமே வெளியேறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இன்று டபுள் எவிக்சன் என்றும் அக்சரா மற்றும் வருண் ஆகிய இருவரும் என்று எலிமினேஷன் செய்யப்பட்டார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இந்த வாரம் ஆறு போட்டியாளர்கள் நாமினேஷன் செய்த நிலையில் அக்சரா மற்றும் வருண் ஆகிய இருவரும் மிகவும் குறைவான வாக்குகள் பெற்று உள்ளதை அடுத்து அவர்கள் இருவரும் எலிமினேஷன் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது
 
இந்த நிலையில் மீதமுள்ள எட்டு பேர்களில் நான்கு போட்டியாளர்கள் இறுதிப்போட்டிக்கு செல்வார்கள் என்பதை அடுத்து  வரும் வாரங்களில் நான்கு போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது