1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 24 டிசம்பர் 2021 (19:25 IST)

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆவது இவரா?

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்பது குறித்த தகவல் சற்றுமுன் கசிந்துள்ளது. 
 
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் 6 பேர் நாமினேஷன் செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் அக்சரா, நிரூப் மற்றும் வருண் குறைந்த வாக்குகள் பெற்று இருப்பதாகவும், இந்த மூவரில் குறைந்த வாக்குகள் பெற்று இருப்பவர் அக்சரா என்பதால் அவர் இந்த வாரம் வெளியேற உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது 
 
அக்சரா, கடந்த சில வாரங்களாக சரியாக விளையாடவில்லை என்றும் அழுது கொண்டும் விரக்தியுடன் இருந்ததால் அவருக்கு வாக்குகள் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது ஆனால் அதே நேரத்தில் அக்சரவை விட நிரூப் மற்றும் வருண் ஆகியோர் மிகக் குறைந்த அளவே வாக்குகள் பெற்று உள்ளார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது