1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 23 டிசம்பர் 2021 (11:46 IST)

அம்மாவை பார்த்ததும் குழந்தையாகவே மாறிய பிரியங்கா - கதறிய தாய்!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இந்த வாரம் முழுக்க ப்ரீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டு போட்டியாளர்களின் குடும்ப உறுப்பினர்களை அழைத்து வந்து பிக்பாஸ் சர்ப்ரைஸ் கொடுத்து வருகிறார். அந்த வகையில், அக்ஷரா , சிபி , நிரூப், பவனி உள்ளிட்டோரை தொடர்ந்து இன்று ப்ரியங்காவின் அம்மா மற்றும் அவரது தம்பி அவரை பார்க்க வந்தனர்.
 
ஆராராரோ ஆரிரரோ பாடல் ஒலிக்க பிரியங்கா அவரது அம்மாவை பார்த்ததும் 5 வயது குழந்தை போல் கதறி அழுது ஓடிவர அவரது அம்மாவும் ஓடி வந்து கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்தினர். மிகவும் எமோஷனலாக இருக்கும் இந்த ப்ரோமோவில் பிரியங்கா அம்மா அம்மா என்று சொல்லி அழும் போது கண்ணில் கண்ணீர் வந்துவிட்டது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ....