1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 24 டிசம்பர் 2021 (13:02 IST)

பிக்பாஸ் வீட்டில் தாமரையின் மகன் - கட்டியணைத்து பாசம் பொழிந்த வீடியோ!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இந்த வாரம் முழுக்க ப்ரீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டு போட்டியாளர்களின் குடும்ப உறுப்பினர்களை அழைத்து வந்து பிக்பாஸ் சர்ப்ரைஸ் கொடுத்து வருகிறார். அந்த வகையில், ராஜு, அக்ஷரா , சிபி நிரூப், பாவினி பிரியங்கா உள்ளிட்டோரை தொடர்ந்து இன்று தாமரையின் இளைய மகன் பிக்பாஸ் வீட்டில் வந்து அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தான். 
 
தெரு கூத்து நாடக கலைஞரான தாமரை திருமணம் செய்துக்கொண்டு இரண்டு மகன்கள் உள்ளனர். இதற்கிடையில் நாடகத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் பேசுவதால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார் தாமரை. அதனால் அவரது மூத்த மகனுக்கு தாமரையின் மீது கோபம்  இருப்பதாக இந்நிகழ்ச்சியில் கூறியிருந்தார். 
 
இப்படியான நேரத்தில் தாமரையின் இளைய மகன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அவரை காண வந்துள்ளான். மகனை பார்த்ததும் ஆசையோடு கட்டியணைத்து கண்ணீர் விட்டு அழும் தாமரைக்கு பலரும் பாசிட்டிவ் கமெண்ட்ஸ்களை குவித்துள்ளனர்.