1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 24 டிசம்பர் 2021 (18:23 IST)

பிக்பாஸ் வருண் நடித்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் வருண் நடித்து வரும் படத்தின் டிரைலர் வெளியீடு டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது 
 
பிக் பாஸ் நிகழ்ச்சியில் 80 நாட்களுக்கும் மேலாக சிறப்பாக விளையாடி வரும் போட்டியாளர்களில் ஒருவர் வருண் என்பதும் தெரிந்ததே 
 
இந்நிலையில் வருண் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’ஜோஷ்வா இமை போல் காக்க’ என்ற திரைப்படத்தின் டிரைலர் நாளை மாலை 05.27 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த படத்தை வருண் உறவினர் ஐசரி கணேஷ் அவர்களின் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதும் இந்த படம் ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்பது குறிப்பிடத்தக்கது