செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 6 நவம்பர் 2018 (13:58 IST)

பாலிவுட்டுக்கு பறந்த விஜய் பட நடிகை

பாலிவுட்டில் நடிகர் அக்ஷய் குமார் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க தென்னிந்திய நடிகை நித்யா மேனன் ஒப்பந்தமாகி உள்ளார்.
தமிழில் காஞ்சனா 2,  ஓ காதல் கண்மணி, மெர்சல் உட்பட பல படங்களில் நடித்தவர் நித்யா மேனன். மலையாள நடிகையான இவர் கன்னடம், தெலுங்கு படங்களிலும் நடித்து பிரபலமானவர் தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து நடித்து வரும் இவர் இப்பொது பாலிவுட்டில் உருவாக இருக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
 
நடிகர் அகஷய் குமார் நடிக்கும் புதிய படத்தில் இவர் நடிக்க உள்ளார். இந்தியாவின் மங்கல்யான் திட்டத்தை மையமாக கொண்டு இந்த படம் உருவாக உள்ளது. இதில் வித்யா பாலன், டாப்ஸி, சோனாக்‌ஷி சின்ஹா ஆகியோர் நடிக்க உள்ளனர்.